MARC காட்சி

Back
தேவர்மலை குடைவரைக் கோயில்
245 : _ _ |a தேவர்மலை குடைவரைக் கோயில் -
300 : _ _ |a குடைவரைக் கோயில்
500 : _ _ |a

       புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக பேரையூர் செல்லும் சாலையில் பேரையூர் விலக்கிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் தேவர்மலை உள்ளது. சுற்றிலும் தைலமரங்கள் நிறைந்த பகுதியில் அரசு, நாவல், புளிய மரங்கள் சூழ்ந்த வயல் பகுதியில் அழகாகக் காட்சியளிக்கிறது இம்மலை. முன்மண்டபத்துடன் கூடிய குடைவரையைக்கொண்ட இக்கோயிலின் வெளியே நாவல் மரத்தடியில் ஒரு மேடையின் மேல் இரண்டு நந்திகள் கோயிலை நோக்கி உள்ளன. முன்மண்டபத்தினுள் சிறிய பலிபீடமும் நந்தியும் உள்ளன. இம்மண்டபத்தினுள் தேவநாயகி அம்மன் எழுந்தருளுகிறார். கிழக்கு மேற்காக அமைந்த பாறைச்சரிவில் குடையப்பட்ட இக்குடைவரைக் கோயிலின் இடப்புறம் விநாயகர் சிற்பமும் வலப்புறம் லகுலீசர் சிற்பமும் வடிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் சதுர ஆவுடையாருடனும், உருளைப்பாணத்துடன் இலிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

         கருவறைக்கு வெளியே புலத்தியர், அகத்தியர் என்றழைக்கப்படும் முனிவர்கள் இறைவனை நோக்கி கையைக்காண்பித்தவாறு நின்றநிலையில் உள்ளனர். வலது கோட்டத்தில் லகுலீசர் சிற்பம் வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடக்கி வைத்தவாறும், இடையில் அரையாடையுடனும் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது.

520 : _ _ |a

          குஜராத்தில் காயாவரோகணம் என்னுமிடத்தில் பிறந்த லகுலீசர் சைவசமயத்தின் ஒருபிரிவான லகுலீச பாசுபதத்தைத் தோற்றுவித்தவர். இவர் சிவபெருமானின் இருபத்தெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். இவரது சிற்பங்கள் வடஇந்தியாவில் குறிப்பாக ஒரிசாவில் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் அடையாளம் காணப்பட்ட லகுலீசர் சிற்பங்கள் தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, பேரூர், அரிட்டாப்பட்டி, தேவர்மலை முதலிய இடங்களில் காணப்படுகிறது. தேவர்மலை கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாகும். இக்குடைவரை முற்காலப் பாண்டியர்களின் கலைப்படைப்பாக கருதப்படுகிறது.

653 : _ _ |a குடைவரை, கோயில், குகைக் கோயில், குடவரை, புதுக்கோட்டை, தேவர்மலை, லகுளீசர், லகுலீசர், முற்காலப் பாண்டியர்
710 : _ _ |a திரு. பாலா பாரதி
752 : _ _ |a தேவர்மலை |c தேவர்மலை |d கரூர் |f கரூர்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.3084
915 : _ _ |a 78.779
995 : _ _ |a TVA_MON_00034
barcode : TVA_MON_00034
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00034_தேவர்மலை_கோயில்_வெளித்தோற்றம்-0001.jpg

TVA_MON_00034_தேவர்மலை_லகுலீசர்-0002.jpg

TVA_MON_00034_தேவர்மலை_நந்தி-0003.jpg